நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டி, சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்தவர் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடம் தனிச்சிறப்பு பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. சூரி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் .
என்னதான் t shirt-u jeans nu போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா 😎😍🔥 pic.twitter.com/P5gFEbVJ5n
— Actor Soori (@sooriofficial) December 18, 2020
இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே கலக்கி வந்த சூரி தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் . இந்த படத்தில் நடிக்க தனது உடலமைப்பை மாற்றி சிக்ஸ்பேக் வைத்திருந்த அசத்தலான புகைப்படத்தை இணையத்தில் தெறிக்க விட்டார் . தற்போது சூரி பட்டு வேட்டி ,பட்டுச் சட்டையில் மீசை, தாடி வைத்து கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னதான் டீசர்ட் ஜீன்ஸ் போட்டாலும் வேட்டி சட்டை போட்டாலே தனி கெத்துதான்டா’ என பதிவிட்டுள்ளார். இந்த அசத்தலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.