தமிழகத்தில் 40% குழந்தைகள் வளர்ச்சி குறைவாக பிறப்பதாக WHO அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிறந்த குழந்தையின் எடை சராசரியாக 2.5 கிலோவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 40 சதவீதம் குழந்தைகள் 2 முதல் 2.2 கிலோ எடையுடன் தான் பிறக்கின்றன. குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைய 37 முதல் 40 வாரங்கள் வரை ஆகும். 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
எடை குறைந்த குழந்தைகளை ஐந்து வயது வரை கவனமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது கிடையாது. இதனால் சுமார் 40% குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதாக WHO அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அரசு நிதியை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.