அடுத்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டார். கொரோனவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரதிற்கு புத்துயிர் ஊட்டும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் மூலம் இதற்கு முன்பு இல்லாத வகையில் பட்ஜெட் தயாரிக்கும் முடியும் என்றும், இது போல ஒரு பெரும் தொற்றுக்கு பிறகு தயாரிக்கப்படும் பட்ஜெட்டை கடந்த நூறு ஆண்டு கால இந்தியா பார்த்திருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் தாக்குதல் தொடர்பாக அடுத்த கூட்டத்தொடர் நடைபெறும் என்பது நிதி அமைச்சரின் இந்த பேச்சு மூலம் உறுதியாகியுள்ளது.