குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த பின்பும் ஐந்து குழந்தைகளுக்கு உடல் உறுப்பு தானத்தால் வாழ்ந்து வருகிறார்.
குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது ஜாஷ் சஞ்சீவ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி தனது பக்கத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு மூளை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ அறிக்கைகள் குறித்து கூறும் போது மூளையில் ரத்த கசிவு காரணமாக மூளை வீக்கம் ஏற்பட்டு டிசம்பர் 14ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து தொண்டு நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில் இரண்டரை வயது சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மற்றும் கண்கள் ஆகியவற்றை தானம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். உடல் உறுப்பு தானம் தொடர்பாக டொனேட் லைஃப் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பத்திரிக்கையாளரான ஜஸ்டின் தந்தை சஞ்சீவி அணுகியபோது ஒரு உடல் உறுப்பு தானத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதயம் ரஷ்யாவை சேர்ந்த 4 வயது குழந்தைக்கும், நுரையீரலை உக்ரைனை சேர்ந்த ஒரு பையனுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் சென்னையின் ஐஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுநீரகங்கள் சாலை வழியாக அகமதாபாத்தின் சிறுநீரக நூல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சிறப்பு பசுமை நடை பாதை வழியாக கொண்டு செல்லப்பட்டது.
ஒரு சிறுநீரகம் சுரேந்திரன் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி இருக்கும், மற்றொன்று சூரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் என மாற்றம் செய்யப்பட்டது. பாவ்நகரைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி ஒருவருக்கு கல்லீரலுடன் புதிய வாழ்க்கை கிடைக்க அந்த குழந்தையின் உடல் உறுப்பு உதவியுள்ளது. இந்த அனைத்து உறுப்புகளின் மூலமாக அந்த இரண்டரை வயது சிறுவன் உயிர் வாழ்ந்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.