ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது.
ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர் உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான Raimund bruhin கூறியுள்ளதாவது, தடுப்பூசிகளின் அங்கீகாரம் என்பது நோயாளிகளின் பாதுகாப்பை வைத்துதான் குறிப்பிடப்படுகிறது என்றார் மேலும் மூன்று முக்கிய தேவைகளான பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவை திருப்திகரமானதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் மொத்தமாக 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது இதனால் மூன்று உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 15 .8 மில்லியன் டோஸ் பெற முடிவு செய்துள்ளனர். இதில் 3 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிகளும் 7.5 மில்லியன் டோஸ் மாடர்னா தடுப்பூசிகளும் 5.3 மில்லியன் Astra zenica தடுப்பூசிகளும் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.