பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் ஹிந்தி திரையுலகில் கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத்திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார் . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார் .
இந்தப் படத்தில் முஸ்லிம் மன்னரின் மகளான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகை தீபிகா ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார். அதில் தன் பெயருக்கு பதிலாக இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தனது கதாபாத்திரத்தின் பெயரான மஸ்தானி என்ற பெயரை மாற்றியுள்ளார்.