வருகிற டிசம்பர் -21ம் தேதி ‘கேஜிஎப் 2’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீநிதி செட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்தப்படத்தின் அப்டேட்டுக்காக காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு நடிகர் யஷ் பிறந்த நாளான ஜனவரி 8ஆம் தேதி கே ஜி எஃப் 2 படத்தின் டீஸர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதில் ‘அந்த நாள் வந்துவிட்டது. இந்த படத்தின் இறுதியை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் .வரும் 21ஆம் தேதி 10:08 மணிக்கு காத்திருக்கிறது ட்ரீட்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அப்டேட்ககாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.