பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் விதிகளை மீறி விளையாடுபவர்களை கமல் எச்சரித்துள்ளார் . இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது போட்டியாளர்களிடையே ஏற்பட்ட குழப்பம் குறித்து வாதாடுகிறார் கமல்.
#BiggBossTamil இல் இன்று.. #Day76 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/kR138zYRnb
— Vijay Television (@vijaytelevision) December 19, 2020
அதில் விதிமுறைகள் விஷயத்தில் உங்களுக்கு நிறைய குழப்பம் ஏன் ? என்ற கமலின் கேள்விக்கு ஆரி, ‘நரிகளுக்குள் நாலு பேர் டீம் பார்ம் பண்ணிட்டாங்க’ என பதிலளித்துக் கொண்டிருக்க இடையில் புகுந்த ரம்யா, ‘அந்த டீமில் அவரும் ஒருத்தர்’ என்று கூறுகிறார் . அப்போது ‘நான் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் இருங்கள்’ என்ற ஆரியிடம், ‘இது ஒரு இன்ஃபர்மேஷன்’ என்கிறார் ரம்யா . இதையடுத்து கமல் ,’பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோபம் இருக்கத்தான் செய்யும்’ என்று கூறி ரம்யாவின் வாயை அடைத்தார். இதன்பின் விளையாட்டின் விதிகள் குழப்பமாக இருந்ததாக அர்ச்சனா கூறியபோது, ‘சட்டம் இங்கேயும் சரி அங்கேயும் சரி தனி நபருக்காக வளைக்க முடியாது . அப்படி வளைத்தால் நிமிர்த்தி விடுவேன் , நான் கேட்பேன்’ என்று கமல் எச்சரிக்கையுடன் கூறுகிறார் . இதிலிருந்து இன்றைய நிகழ்ச்சியில் கடந்த வாரம் போல இந்த வாரமும் போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக கமல் நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது .