மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகைகள் சாய் பல்லவி ,மடோனா, அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலரே’ பாடல் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் தயாராகவுள்ள அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘பாட்டு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள பிரபல நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.