‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
#ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக #தர்ஷாகுப்தா அவர்கள் அறிமுகம் ஆகிறார்.. pic.twitter.com/7RgcMtcJfC
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 18, 2020
இந்தப் படத்திலும் ‘திரௌபதி’ பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இவர் ‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’, ‘மின்னலே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்.