சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் புது அப்டேட் குறித்து இதில் பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியானது இன்று அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர். முதலில் தகவலை பரிமாறுவதற்கு மற்றும் பயன்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனம் நிறைய அப்டேட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. ஸ்டேட்டஸ் வைப்பது, ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவது போன்று அப்டேட்களை செய்து வந்தது.
தற்போது சில தினங்களாக வாட்ஸ்ஆப் நிறுவனம் நிறைய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் மக்களுக்கு தேவையான ஒன்று. சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்பின் வாட்ஸ் அப் மூலம் கணினியில் பயன்படுத்துபவர்கள் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் பேச இயலும் என்றும் கூறியுள்ளது.
தற்போது சுகாதார காப்பீடு தயாரிப்பு திட்டம் வாட்ஸ்அப் தளத்தில் தொடங்கும் என்றும், சிறிய டிக்கெட் அளவிலான சுகாதார காப்பீட்டின் நிலையான தயாரிப்புகளை அதன் மூலம் வாங்க முடியும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெற முடியும் என்றும் கூறியுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் பின் பாக்ஸ் சொல்யூஷன் போன்ற நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.