பிரிட்டனிலிருந்து லண்டன் பிரிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் பிற பகுதிகளில் இருந்து லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தான் காரணம். மேலும் ஏற்கனவே பரவி வரும் கொரோனா வைரஸை விட தற்போது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் 50% வீரியமிக்கது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் இந்த புதுவகை வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் இவர் மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறியுள்ளதாவது, இங்கிலாந்தின் தென்கிழக்குப்பகுதிகள், லண்டன் மக்கள் பயணம் மேற்கொள்வதை தடை செய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டன் அறிவியலாளர்கள் இப்புதிய கொரோனா வைரஸ் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பரவியுள்ளதாக கூறியுள்ளனர். இப்புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் Kent பகுதியிலிருந்து லண்டனின் பிற பகுதிகளுக்கும் இங்கிலாந்திற்க்கும் பரவியிருக்க வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.