மொத்த விளம்பர சந்தையையும் கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளதாக அமெரிக்கா மாகாணங்கள் குற்றம் சாட்டி வருகின்றது.
உலகையே கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம் இணைய விளம்பர சந்தையில் தனது ஆதிக்கத்தை பாதுகாக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் டெக்சாஸ் தலைமையில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன. இந்த மரணங்களின் பட்டியல் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், இண்டியானா, கென்டக்கி, மிசவுரி, மிசிசிப்பி, தென் டகோட்டா, வட டகோட்டா, உட்டா மற்றும் இடாஹோ ஆகியவை இடம் பிடித்துள்ளன.
கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருமானம் அதன் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. விளம்பர சந்தையில் விளம்பரங்களை கையாள்வதற்காக இந்த நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையெல்லாம் கூகுள் மறுத்து வருகின்றது.
வணிகங்களுக்கு உதவுவதுடன் பொதுமக்களுக்கு பலனளிக்கும் அதிநவீன விளம்பர தொழில்நுட்ப சேவைகளில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். 10 ஆண்டுகளில் டிஜிட்டல் விளம்பர கட்டணங்கள் குறைந்து விட்டன. விளம்பர தொழில்நுட்ப கட்டணங்களும் குறைந்து வருகின்றன. இதனால் நீதிமன்றத்தில் நாங்கள் தங்களை தற்காத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் விளம்பர சந்தைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.