பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அர்ச்சனா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அர்ச்சனா, சோம், ஆஜித், ஆரி, சிவானி, அனிதா மற்றும் ரியோ ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் .
இந்நிலையில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா ரியோ, சோம், நிஷா, கேபி ,ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அன்பு அணி ஒன்றை உருவாக்கினார். இதுவரை இவர்களை மட்டுமே முன்னிறுத்தி விளையாண்டு வந்தார் . இதனால் இந்த சீசன் சற்று சுவாரசியம் குறைவாக தெரிவதாக பிக்பாஸ் ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். கடந்த வாரம் இந்த அணியில் இருந்த ரமேஷ் மற்றும் நிஷா வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அன்பு அணியை உருவாக்கிய அர்ச்சனாவே வெளியேறியுள்ளார். இன்னும் இந்த சீசன் முடிவடைய 31 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இனியாவது பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.