முதல்வர் தன்னுடைய சுயநலத்திற்காக பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலையொட்டி பொங்கல் பரிசு ரூ.2500 அறிவித்துள்ளார் . இந்நிலையில் கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது நிவாரணம் தரவில்லை. தேர்தல் நெருங்கும்போது சுயநலத்துக்காக முதல்வர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுயநலத்தின் மொத்த உருவமே முதல்வர்தான். சசிகலா காலில் ஊர்ந்து முதல்வரானது சுயநலமா? பொதுநலமா? பதவியை காப்பாற்றிக் கொள்ள மோடி அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பது சுயநலமா? பொதுநலமா? என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.