Categories
மாநில செய்திகள்

மக்களே… இனி தமிழகத்தில் “எந்த ரேஷன் கடையிலும்” பொருட்கள் வாங்கலாம்..!!

தமிழகத்தில் இந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரேஷன் கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே வாங்க முடியும். முகவரியை மாற்றி சென்றால், அந்த விவரத்தை உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு முகவரி உட்பட கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருள் வாங்கிக் கொள்ளும் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்” அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழக கார்டுதாரர்கள் தமிழகத்திற்குள்  எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இருப்பினும் இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு கிராமத்தில் மூன்று ரேஷன் கார்டு கடைகள் இருக்கிறது என்றால் கார்டுதாரர்கள் விரும்பிய கடைக்கு முன்னுரிமை தருவர்.

இதனால் கடை ஊழியர்களிடம் பிரச்சினை ஏற்படும். அதை தவிர்க்கவே வார்டு அல்லது கிராமத்தில் உள்ள கடைகளில் மட்டும் வாங்க முடியாது என்று கூறியிருந்தது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்ப பிரச்சனையால் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அக்டோபர் இறுதியில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது தொழில்நுட்ப பிரச்சனை சரி செய்யப்பட்டதை அடுத்து இம்மாதம் 17ஆம் தேதி முதல் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து ரேஷன் கடையில் பொருள் வாங்கும் திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |