Categories
லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளே…. இது உங்களுக்கு சிறந்த மருந்து…. தெரிஞ்சிக்கோங்க…!!

நீரழிவு  நோய்களுக்கு சிறந்த மருந்தாக வேப்பிலை பயன்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீரழிவுக்கான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு குறைவாக இருப்பது நோய்களை தடுக்க முடியாத நிலை உண்டாகிறது. நீரழிவு நோயாளிகள் உணவில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

இதில் வேப்பிலை முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் வளரும் ஒரு மூலிகை வேப்பிலை. வேப்பமரமானது 30-50 அடி உயரம் வளரக்கூடியது. இதன் ஒவ்வொரு பாகமும் வலி நிவாரணியாகவும், நோய் நீக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் வேப்பமரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.வேப்பமரத்தின் இலை, பூ, விதை, பழம் எல்லா பகுதிகளும் பல்வேறு நோய்களின் சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.

வீக்கம், தொற்று, காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பல நோய் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது. இதில் இருக்கும் சில மூலக்கூறுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரழிவு நோயை கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் நம்முடைய உணவை எடுத்து கொள்ளும் போது இரத்த சர்க்கரை அதிகரிப்பால் எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் வராமல் தடுக்க முடியும்.

Categories

Tech |