கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள உறவாக மாறியது. இருவரும் கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் ஜோதிலட்சுமி காச நோய் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இனி என்னால் உயிர் வாழ முடியாது என்று தெரிந்து இருவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து தண்டபாணி வீட்டை விட்டு வெளியேறி தெருவோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் ஜோதிலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.