Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா முதல்வரையும் வச்சு…! தமிழகத்தை பாராட்டிய மோடி… நெகிழ்ந்து போன எடப்பாடி ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார்.

சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையை கொண்டுவர எமது அரசு முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பாரதப்பிரதமர் ஒவ்வொரு மாதமும் காணொலிக் காட்சி மூலமாக இந்தியா முழுவதும் இருக்கின்ற முதலமைச்சர் கூட்டத்தைக் கூட்டி காணொலிக் காட்சியின் மூலமாக ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டறிவார். அவர் கடந்த மாதம் கேட்கின்ற போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளீர்கள். இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு சரியான முறையில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதன் விளைவாக இங்கு நோய்த்தொற்று குறைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனவே தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றேன் என்று  அனைத்து மாநில முதலமைச்சர்கள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக பாராட்டினார் மோடி. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு எப்படி கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதோ அதையே மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என கூறினார். அந்த அளவிற்கு திறமை மிக்க அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

நாம் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்திருக்கிறார்? நாட்டு மக்கள் என்ன நன்மை பெற்றுள்ளார்கள் என்று.  எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களின் வழியில் நடக்கும் அரசு சிறப்பான திட்டங்கள் பலதை நிறைவேற்றி அது நாட்டு மக்களின் இல்லங்களுக்கு சென்று சேரும் அளவிற்கு நன்மைகளை செய்து வருகின்றோம் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |