Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக வெற்றி பெற்றால் கார் ? 10மணிக்கு ஸ்டாலின் அறிவிப்பு…. அதிரடி காட்டும் கட்சி தலைமை …!!

இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றார்.

திமுக சார்பில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சார பயணத்தை தொடங்குவது தொடர்பாக மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் என 1650 நிர்வாகிகள் உள்பட சிறப்பு அழைப்பாளர் என மொத்தம் 2500 பேர் பங்கேற்க இருக்கும் கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தொண்டர்களிடையே பேச இருக்கின்றார்.

குறிப்பாக ஒரு பொதுக் குழுக் நிகராக இந்த கூட்டம் நடை பெறுவது திமுக வரலாற்றிலேயே முதல் முறை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முதல் பஞ்சாயத்தை கிளைக் கழகச் செயலாளர்கள் வரை ஆலோசனை இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரசாரப் பயணத் திட்டம் வகுப்பது தொடர்பாக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு அறிவிப்பை அறிவிக்க இருக்கிறார்.

இதற்கு முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் பேசக்கூடிய நிர்வாகிகள் ஸ்டாலின் தேர்தலில் பணியாற்றக்கூடிய நிர்வாகிகளுக்கு பரிசு வழங்க கூடிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். குறிப்பாக பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் 234 தொகுதிகளில் இருந்து எம்எல்ஏக்களை அனுப்பும் மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு இன்னோவா கார் வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்ததை அதே போன்று தற்போது திமுகவும் அறிவிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் அறிவித்திருக்கிறார். இதை சுயநலத்துக்காக முதல்வர் அறிவித்து இருக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார் எனவே இது போல ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பை கூட ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் தெரிவிக்கின்றன.

Categories

Tech |