Categories
உலக செய்திகள்

உஷார்!! ஆன்லைன் கிளாசில் “ஆபாச படம்”…. அம்பலப்படுத்திய மாணவி… சிக்கிய ஆசிரியர்…!!

ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம் பார்த்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே மாணவர்ககளுடன் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைந்து பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சவுத் ப்ரோவேர்டு ஹை ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இருக்கிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் மைக்கேல் ப்ராஎஸிகி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார். இவர் அதே பள்ளியில் 20 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீடியோ கால் மூலம் மாணவர்களுக்கு “உலகளாவிய பார்வை மற்றும் ஆய்வுகள்” என்ற தலைப்பில் வகுப்பு நடத்தி கொண்டிருந்துள்ளார். ஆனால் இவர் அந்த வகுப்பை ஒரு ஆர்வமாக இல்லாமல் வகுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தனியாக மற்றொரு திரையில் “ஆபாசப் படம்” படம் பார்த்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதை ஆன்லைன் வகுப்பு கவனித்து கொண்டிருந்த மாணவி எலிஜா ரூபி தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்த ட்விட்டர் பதிவில் வகுப்பு நேரத்தில் ஆசிரியர் ஆபாசப் படம் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருந்துள்ளார். ஆசிரியரின் மோசமான செயல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்நாட்டுக் கல்வி அதிகாரிகள் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1338627951114514433

Categories

Tech |