பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வின் தந்தை இன்று காலமாகியுள்ளார் .
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டைட்டில் வின்னராகியவர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அதிகளவு பிரபலமடைந்த இவர் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜபீமா’, ‘மீண்டும் வா அருகில் வா’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் இவருக்கு ராகினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் ஆரவ்வின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரவ் வீட்டில் ஏற்பட்ட இந்த திடீர் இழப்பால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தகவலையறிந்த திரையுலகினரும் , ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .