மக்கள் பணத்தை பார்ப்பதில்லை ஜெயலலிதா அவர்களே தோற்றுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அதிமுக 2500 ரூபாய் பொங்கல் பொங்கல் பரிசாக அறிவித்திருப்பது கவரக்கூடிய ஒன்றாக இருக்கும் நிலையில் மக்கள் ஆதரவை அவர்களுக்கு கொடுத்து விடுவார்களோ என்ற நெருக்கடி திமுக கூட்டணிக்கு இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எல் அழகிரி கூறும் போது, பொதுவாகவே பொங்கலுக்கு பணம் கொடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதையெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் பல நேரங்களில் செய்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவர் செய்த அளவுக்கு உதவிகளை பொதுமக்களுக்கு வேறு யாரும் செய்ததில்லை. ஆனால் பொதுமக்கள் அதை எப்படி புரிந்து கொண்டார்கள் என்றால் இது மக்களின் தேவையறிந்து செய்யும் விஷயம் அல்ல, வாக்குகளை விலை பேசும் விஷயம். தேர்தல் நேரத்தில் இதை செய்கிறார்கள். இதனால் நம்முடைய பணத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
இதற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி பல நேரங்களில் அண்ணா திமுக தலைமை தோல்வியை தழுவி இருக்கிறது. ஜெயலலிதா அவர்களே தோல்வியை தழுவி இருக்கிறார். பணம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரவேற்பு இருக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதுவே வெற்றிக்கான வழியாக இருந்துவிடாது. பொதுமக்கள் இப்போது பிரித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் பணம் எதற்காக கொடுக்கப்படுகிறது? இந்தப் பணம் யாருடைய பணம்? அரசின் பணம் அரசின் திட்டம் என்கிற பெயரில் இவர்கள் கொடுக்கிறார்கள். எனவே இதற்காக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற உணர்வு மக்களுக்கு வந்துள்ளது. எனவே அண்ணா திமுக தங்களையே ஏமாற்றிக் கொள்ள முடியுமே தவிர இதன் மூலமாக அவர்கள் வெற்றி பெற முடியாது.