Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“4 மாசம் சம்பளம் இல்ல”… வேலையும் போச்சு… நகராட்சி ஊழியரின் விபரீத முடிவு..!!

வேலை  பறிபோனதால் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல்-அஜிதா. அஜிதா திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வந்தார் . இந்நிலையில் அஜிதாவிற்கு  கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அஜிதாவை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் தகாத வார்த்தையால் திட்டி பணி நீக்கம் செய்துள்ளார்.

இதனால் அஜிதா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில்  அஜிதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில் அஜிதாவின் உறவினர்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்கப்பட  வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |