Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் மாதேஸ்வரனின் ‘சாணிக் காயிதம்’… முழுக் கதையை படித்த செல்வராகவன்… டுவிட்டரில் போட்ட பதிவு…!!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும்’சாணிக் காயிதம்’ படத்தின் முழுக் கதையை படித்த இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் .

தமிழ் திரையுலகில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் முதலாவதாக தயாராகிய திரைப்படம் ‘ராக்கி’ . இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இன்னும் வெளியாகாத இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றினர் . இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கும் திரைப்படம் ‘சாணிக் காயிதம்’ . நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Saani Kaayidham First Look Poster | Selvaraghavan | Keerthy Suresh, Arun  Matheswaran - YouTube

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் முழுக் கதையை படக்குழுவினருடன் படித்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் ‘அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் படித்து முடித்தேன் . ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இது அசாதாரணமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |