Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சேலம் மீன் குழம்பு …செய்து பாருங்கள் …!!!

சேலம் மீன் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

வவ்வா மீன்                         –   1 கிலோ
சின்ன வெங்காயம்          – 15
பூண்டு                                    –  9 பல்
தக்காளி                                –  3
மஞ்சள் தூள்                      –  1 தேக்கரண்டி
உப்பு                                       – தேவையான அளவு
புளி ‍                                        –  1 எலுமிச்சை அள‌வு
வெந்தயம்                          –   2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்           –    2 குழம்பு கரண்டி
சீரகம்                                   –  2 தேக்கரண்டி
மிளகு                                  ‍-   1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்       -‍   13 பெரிய‌
தேங்காய் பொடி            – 3 தேக்கரண்டி
தனியா தூள்                    –  1  மேசைக்கரண்டி
மிளகாய் தூள்                 -‍  1  தேக்கரண்டி
கறிவேப்பிலை             – சிறிது
சீரகம்                                 – கால் தேக்கரண்டி,

வெந்தயம்                       – 1 தேக்கரண்டி
எண்ணெய்                      –  2 மேசைக்கரண்டி,
கொத்தம‌ல்லி த‌ழை  – சிறிது

செய்முறை :

முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் பவுடர், அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

பிறகு குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்க்கவும். மீன் வெந்ததும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து குழம்பில் போட்டு இறக்கவும்.

அடுத்தது நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி அடுப்பில் சூடு பண்ணவும். நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும். கொத்தம‌ல்லி த‌ழை தூவி இறக்கவும். மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்.

Categories

Tech |