Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி பற்றி மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!!

திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை காயப்படுத்தி கட்சி தொடங்கி வைக்கின்றனர் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின்: “ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். கிராமசபை கூட்டங்கள் முடிந்த பிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். கொரோனா காலத்திலும் மக்களுக்காக செய்துள்ள பணிகளை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே வர உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகின்றது. தேர்தல் எப்போது வந்தாலும் சரி அதில் வெல்ல முனைப்புடன் பணியாற்றவேண்டும். 200 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி திமுக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். வரும் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.அர்ஜுனன் போன்று திமுக வைத்த குறி தப்பாது.

சிலரை காயப்படுத்தி கட்சி தொடங்க வைத்து நம்மை தோற்கடிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அது பலிக்காது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு கருத்து சொல்கிறேன் என்று கூறி வந்த ஸ்டாலின் இன்றைய கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினியை தான் மறைமுகமாக பேசி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |