நேபாள நாட்டில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் அமைச்சரவை பரிந்துரைத்து உள்ளது.
பிரதமர் திரு .கேபி சர்மா உள்ளிட்டோர் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . நேபாள நாட்டின் ஆளும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு பிரஜந்தா வர்க்கும் – பிரதமர் திரு கே பி சர்மா ஒலி-க்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்து வந்தது.
இந்நிலையில் அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க தனக்கு அதிகாரம் அளிக்க வகைசெய்யும் அரசமைப்பு கவுன்சில் அவசர சட்டத்தை அன்மையில் பிரதமர் சர்மா ஓலி பிறப்பித்திருந்தார். இதற்கு அந்நாட்டின் அதிபரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார். இதற்கு ஆளும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் ஆட்சியில் பெரும் குழப்பம் நிடித்தது. பிரச்சனைக்கு தீர்வுகான தேசிக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு பிரஜந்தாவுடன் பிரதமர் திரு.சர்மா ஓலி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நேபாள் அதிபர் வித்தியதேவி பந்தாரியே நேற்று மாலை பிரதமர் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலையில் அமைச்சரவையின் அவசர கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் நேபாள் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரை கடிதத்துடன் அதிபர் வித்தியதேவி பந்தாரியை சந்திக்க அவரது மாளிகைக்கு பிரதமர் விரைந்தார்.