வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகள், குளங்கள்மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது குமரி கடலுக்கு மேலே ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி காணப்படுவதால் தமிழகத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.