கொரோனா தொற்று உறுதி, குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உறங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும் பின்னர் கூடுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1, 00, 31, 223 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 1, 45, 477 ஆகும். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95, 80, 402 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 3, 05, 344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.