Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது..? ரயில்வே நிர்வாகம் விளக்கம்..!!

இனி இரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது என்ற தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் நீக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக தற்போது ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது ரயில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது. தற்போது தேவைக்கேற்ற ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருகிறது. காத்திருப்பு பட்டியல் முறையை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் அதனை நீக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |