கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிச்சாண்டி- கலைச்செல்வி. கலைச்செல்வி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார் . இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத கலைச்செல்வி கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையில் அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்துஅவரது 25 வயதுடைய மகள் இந்துமதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.