புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய குரானா வைரஸ் பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இத்தாலியில் கிறிஸ்துமஸ், புத்தாண்தையொட்டி மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் சில மாநிலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.