கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மனிதர்கள் முதலைகள் ஆக மாற வாய்ப்புள்ளதாக பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டு உலகமே நடுங்கி வந்த நிலையில், அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என பேசியவர்தான் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரேசில் அதிபர் போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் போட்டுக்கொள்ள மாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு தாடி வளர்ப்பதாகும். தடுப்பு மருந்தால் ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்காது என்றும் கூறியுள்ளார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.