மசாலா அவல் செய்ய தேவையான பொருள்கள் :
அவல் – 2 கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
எண்ணைய் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 இனுக்கு
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை :
முதலில் அவலை ஒரு நிமிடம் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணையை ஊற்றி பச்சை மிளகாய் , கறிவேப்பிலையை போட்டு பொறியும் வரை வதக்கி பின் மஞ்சள்தூள் , அவல் போட்டு நன்றாக கிளறவும்.
அதன் பின் நிலக்கடலை,பொரிகடலையை ரவை பக்குவத்திற்கு பொடித்துக் கொள்ளவும். இதை அதே வாணலியில் போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.பின் உப்பு தூவி இறக்கலாம். மசாலா அவல் ரெடி.