கும்பம் ராசி அன்பர்களே…! மனம் உங்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.
தேவையில்லாத சிந்தனைகளால் மன அமைதி சிறிது குறையும். சில நபர் வேண்டும் என்று உங்களிடம் பிரச்சினை படுத்தக் கூடும். உறக்கத்தில் குறைபாடு இருக்கும். எதையோ ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள். கடன் பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். வாயடைக்கும் கண்டிப்பாக வேண்டும். கோபம் தலைக்கேற என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவோம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நிம்மதியாக இருக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டும் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். பண விஷயத்தில் ரொம்ப கவனம் வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை மட்டும் வெளிப்படுத்த பாருங்கள்.
காதலில் உள்ளவர்கள் நிதானமாகப் பேசுங்கள். அன்புடன் நடந்து கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.