கோல்டன் குளோப் விருது விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்கள் திரையிடப்படவுள்ளன .
ஒவ்வொரு வருடமும் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளில் போட்டியிட தகுதியானவை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோல்டன் குளோப் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழில் நடிகர் தனுஷின் ‘அசுரன்’ மற்றும் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ ஆகிய திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது . ஓடிடி தளத்தில் வெளியான நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் தனுஷின் அசுரன் திரைப்படம் இந்திய பனோரமாவில் திரையிட தேர்வாகி இருந்த நிலையில் தற்போது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடப்பட உள்ளது . இதனால் உற்சாகமடைந்த சூர்யா மற்றும் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.