Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போன் முக்கியமா..? குழந்தை முக்கியமா..? பரிதாப முடிவு..!!

செல்போன் சார்ஜர் போட்டு இருந்த ஜங்ஷன் பாக்ஸ் இல் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பாலவாக்கத்தில் மாரிமுத்து என்பவரின் மகன் எட்டு மாத குழந்தை மதன். அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். பணி முடித்து வந்த மாரிமுத்து வீட்டில் இரவில் செல்போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு ஜங்ஷன் பாக்சை தரையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மதன் ஜங்ஷன் பாக்ஸில் கைவைக்க திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்தில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த பெற்றோர்கள் குழந்தை கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜங்ஷன் பாக்ஸ் இல் கைவைத்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்களே செல்போனை விட குழந்தையே முக்கியம். கவனமாக இருங்கள்.

Categories

Tech |