வீட்டில் பூஜைக்கு நாம் மஞ்சள், குங்குமம், கற்பூரம் போன்ற பல பொருட்களை உபயோகப்படுத்துவோம். ஆனால் அவற்றை எதற்காக நாம் உபயோகப்படுத்துகிறோம் என்று பலருக்கும் இதுவரை தெரிந்திருப்பதில்லை. கற்பூரம் என்பது ஆண்டிபயாடிக் நிறைந்த ஒன்றாகும். இது நமது அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை கொடுக்கும்.
கற்பூரம் மட்டுமல்லாது கற்பூர எண்ணெயும் பயனுள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. அனைவருக்கும் கற்பூரம் ஏற்றுக்கொள்ளும் என கூறிவிட முடியாது. எனவே கற்பூரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் கை மணிக்கட்டு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு எந்த பக்கவிளைவும் இல்லை என்றால் அதனை பயன்படுத்தலாம்.
கற்பூரத்தை சிறிய தாளில் மடக்கி பணம் வைக்கும் பையில் வைத்துக் கொள்வதால் பண வரவு அதிகரிக்கும். இன்றைய காலத்தில் சளிக்கு தைலமாக கற்பூரம் சேர்க்கப்படுகின்றது. அதற்கு காரணம் அதில் இருக்கும் நறுமணமும் மருத்துவ குணங்களும் தான். முந்தைய காலத்தில் கற்பூரம் நாட்டு மருத்துவத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வளித்தது.
கற்பூரத்தால் ஏற்படும் நன்மைகள்
கர்ப்பிணி பெண்களுக்கு பிடிப்புகள் ஏற்பட்டால் கற்பூர எண்ணெயை பயன்படுத்துவது தீர்வு கொடுக்கும்.
குதிகாலில் வெடிப்பு இருப்பவர்கள் கற்பூர எண்ணெய் தேய்த்து வந்தால் விரைவில் வெடிப்புகள் சரி ஆகி வலி மறைந்துவிடும்.
கற்பூரத்தின் உதவியுடன் மூக்கடைப்பு பிரச்சனையிலிருந்து உடனடியாக தீர்வு காண முடியும்.
தலையில் அதிகமாக பேன் தொல்லை இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து தடவி வர வேண்டும்.
குறிப்பு: குழந்தைகள் தவறுதலாக கற்பூரத்தை சாப்பிட்டால் வலிப்பு வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் கற்பூரத்தை வைப்பது நல்லது.