ஹரியானாவில் திருமணமான நபரை நம்பி சென்ற 19 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 14ஆம் தேதி சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியை சுமார் ஒன்றரை மாதங்களாக அடைத்து வைக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். அந்த சிறுமியை திருமணமான நபர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஒன்றரை மாதங்கள் ஒரு வாடகை விடுதிக்குள் அந்த சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமியும் அந்த நபரும் டிசம்பர் 10ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு அம்பாலாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்தப் பெண்ணிற்கு கொரோனா பரிசோதனையும் முதல் உதவியும் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.