வோடோபோன் மற்றும் ஐடியா சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.399 விலையில் புதிய டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இரண்டுக்கும் பொருந்தும். ரூ.399 ப்ரீபெய்டு சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் போஸ்ட்பெய்டு சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 150 ஜிபி டேட்டா, ஆறு மாதங்களுக்கு 200 ஜிபி ரோல் ஓவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.