பொய்யாக பரவிய தகவலுக்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா.
தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படும் சமந்தா வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். சமந்தாவுக்கும் அவரது அம்மாவுக்கும் தகராறு என்று சமீபத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்க தனது தாய்க்கு நடிகை சமந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தாய் செய்யும் வழிபாடுகள் எப்பொழுதும் எனக்கு நம்பிக்க்கையை தரும். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் சில மாயங்கள் செய்துள்ளன. நான் சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் கேட்டுள்ளேன். இப்போதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என் அம்மாவின் சிறந்த குணம் என்னவென்றால் அவர் எப்பொழுதும் தனக்காக வேண்டுவதில்லை. என்று கூறி இறுதியில் ஐ லவ் யூ அம்மா என்று எழுதியுள்ளார்.