397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வாக இன்று மாலை ஐந்து மணிக்குமேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக இணையும் காட்சியை தோன்றுகிறது.
இன்று மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வருகின்ற நிகழ்வு இன்று மாலை 5.45 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களைப் போல் தோற்றமளிக்கும். இது கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு என்று கூறப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார். இந்த காட்சியை இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நம்மால் பார்க்க முடியும். அதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.