சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினரால் தான் வீழ்த்த முடியும் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின் உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பின் காவலர்கள், உதயசூரியனின் ஒளி விளக்குகள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. இதுதான் நம்ம இந்த அரங்கத்திற்குள் அமர வைத்துள்ளது. உங்களில் சிலர் எம்எல்ஏவாக மாறலாம். ஆனால் அந்தப் பெருமை தனி ஒருவரால் மட்டும் இல்லை.
சட்டமன்றத்தின் படிக்கட்டை மிதிக்காமல், அண்ணா அறிவாலத்தில் பக்கமே வராமல் ஏதோ ஒரு குக்கிராமத்தில் குடிசையில் வாழ்ந்து கொண்டு கழகத்தின் கிளைகளை வைத்திருக்கிறானே தொண்டன் அவனை நீங்கள் மதிக்க வேண்டும். அவனது உழைப்பிற்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். கழக நிர்வாகிகள் உங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மாறுபாடுகளை இந்த இடத்தோடு விடவேண்டும். கெட்டுப்போன நிலத்தில் எந்த பயிரும் எப்படி முளைக்காது அதேபோன்று கெட்ட மனதுடையவர்களால் மற்றவர்களுக்கு உழைக்க முடியாது.
எல்லோரும் எல்லோருக்காகவும் உழைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வரமுடியும். நம் நாட்களை நாம் வீழ்த்த நினைத்தால் அது உண்ட வீட்டிற்கு செய்யும் துரோகம். இவர்களைத்தான் கழகத்தின் புற்றுநோய் என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார். சொந்த கட்சிக்கு துரோகம் செய்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதைவிட மோசமாக இருப்பவர்கள். நீங்கள் மறந்து விடக்கூடாது இது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்ட வேண்டும். அதற்கான தனி வியூகத்தை நாங்கள் அமைத்து இருந்தாலும் நீங்களும் ஒரு வியூகத்தை அமைக்க வேண்டும். இந்த தொகுதியில் இல்லாமல் நீங்கள் இருக்கும் தொகுதிகள் அனைத்திலும் அதிக பணம் விளையாடலாம் அதை நாம் பலத்தால் வென்று காட்ட வேண்டும். தேர்தலுக்கு பணம் முக்கியம் தான் பணம் மட்டுமே முக்கியமல்ல. பணம் கொடுத்தால் ஜெயித்து விடலாமா? பணம் கொடுத்த பல தேர்தலில் அதிமுக தோற்றும் போயுள்ளது.
அப்படி என்றால் அதை காரணமாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது பணத்தை கொடுத்து அதிமுக வெற்றி பெற்றது என்று. காவல்துறையினரை பயன்படுத்தி அதிமுக வெற்றி பெற்றது என்று சொல்லிக் கொண்டு செல்ல முடியாது.