நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொள்ளையடித்துள்ளனர், கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பணம் கொடுப்பார்கள். பணமா? மக்கள் மனமா? என்று கேட்டால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனதிற்கு இருக்கிறது என்று நான் கூறுவேன். இந்த நிலையில் மக்கள் மனதை நீங்கள் மாற்ற வேண்டும்.. அதற்காக தான் இந்தப் பிரசார வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு பல காரணம் கூறினார்கள். எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் ஊராட்சி சபைகளை கூட்டமும் நிர்வாகிகள் செயலாளர்கள் ஆகியோர் சென்று அந்த கூட்டத்தை நடத்தினோம், அதுதான் முக்கிய காரணமாக இருந்தது.
நாம் வெற்றி பெறுவதற்காவே இன்று இருக்கின்ற இந்த பிரசார வியூகத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி கடந்த பத்து வருடங்களாக இருக்கின்றது. பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சி மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. தொகுதி பக்கமே வரவில்லை என்ற கோபம் மக்களுக்கு இருக்கிறது. அந்தக் கோபம்தான் தேர்தல் நேரத்தில் நமக்கு அதிகமாக பயன் பட போகிறது. கடந்த பத்து ஆண்டு காலத்தில் அனைத்து துறையிலும் தமிழ்நாடு சந்தி சிரிக்க வைத்துள்ளது.
அவலங்களை… அழிவுகளை… தோல்விகளை… மக்களுக்கு நாம் நினைவு ஓட்டுகின்ற பிரச்சாரத்தை நாம் உடனடியாக தொடங்க வேண்டும். இதுவரை நாம் நடத்தி வந்த பிரச்சாரம் நாம் ஏற்கனவே காணொலிக் காட்சி மூலமாக ஒவ்வொரு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மீட்போம் என்ற தலைப்பில் தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்தினோம். இன்னும் நாலைந்து மாவட்டங்கள் உள்ளது. அதையும் இந்த மாதத்தின் இறுதியில் முடித்துவிடுவேன். இதற்கிடையே விடியலை நோக்கி எனும் தலைப்பில் நமது மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் என பலர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.
இன்று உங்களிடம் அறிவித்து நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பத்து நாள் கிராமசபை பிரச்சாரம் முடிந்த பிறகு என்ன திட்டம் என்பதை ஐந்து ஆறு நாட்கள் கழித்து அது குறித்து அறிவிப்பேன். அந்த பிரச்சாரமும் நடைபெற இருக்கிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நாம் நடத்திய ஊராட்சி கூட்டம் எப்படி பயன்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சாரத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி தரவேண்டும் என நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.