இன்று வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் அருகருகே வரும் நிகழ்வு வானில் நடைபெறுகிறது.
சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. சூரியனை சுற்றி வரும் போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் சில நேரங்களில் நேர்கோட்டில் வருவதுண்டு. இதன்படி 800 வருடங்களுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் மிக நெருக்கமாக அருகில் பூமிக்கு அருகில் வர உள்ளன.
வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் நெருங்கி ஒரே கோளாக இன்று மாலை 6.30 மணிக்கு காட்சி அளிக்கும். இந்த அரிய நிகழ்வை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதை காண தவறாதீர்கள். இந்த நிகழ்வின் போது இரண்டு கிரகங்களும் நட்சத்திரத்தை போல காட்சியளிக்கும்.