Categories
தேசிய செய்திகள்

‘கிசான் மோர்ச்சா’ முகநூல் பக்கம் நீக்கம்… மத்திய அரசு நடவடிக்கை ..!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 26 வது நாளாக கடும் பனியிலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு ஆதரவு எழுந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், “கிசான் மோர்ச்சா” என்ற பெயரில் முகநூல் பக்கத்தை தொடங்கினார். ஆனால் அந்த முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories

Tech |