Categories
அரசியல்

‘2000 ரூபாயை நம்பி 5 ஆண்டை அடகு வைப்பதா’?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக அரசு தரும் 2000 ரூபாயை நம்பி ஐந்து ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விட கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை விமர்சித்து பேசியுள்ள அண்ணாமலை கூறுகையில், “தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக தருவதுதான் தமிழக அரசியல். வெறும் 2,000 ரூபாயை நம்பி 5 ஆண்டு தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், “காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்”தான் அரசியல்வாதியாக வருவார்கள்” என்று ஈபிஎஸ் ஓபிஎஸ்-யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |