இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் மாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் நிலைமை கையை மீறி சென்று விடக்கூடாது என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிலைமையை உணர்ந்து மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.