Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைக்காய் மசாலா… செய்து பாருங்கள் …!!!

வாழைக்காய் மசாலா செய்ய தேவையான பொருள்கள் :

வாழைக்காய்                                   –  2
வெங்காயம்                                      – 2
தக்காளி                                              –  2
தேங்காய்                                           –  2 துண்டு
சோம்பு                                                –   2  தேக்கரண்டி
மிளகாய்த் தூள்                              –   2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்                         –    2தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 4

 செய்முறை :

முதலில் வாழைக்காயை தோலுரித்து துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய், சோம்பு, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்

அதன் பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.தாளித்தவற்றுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.வெங்காயம், தக்காளியுடன் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

அடுத்தது வதக்கியவற்றுடன் வேக வைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும். அனைத்தும் சேர்ந்து வரும் போது, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.சுவையான வாழைக்காய் மசாலா தயார்.

Categories

Tech |